தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் முன்னெச்சரிக்கையாக 430 பேர் மீது போலீசார் வழக்கு

தேர்தல் முன்னெச்சரிக்கையாக 430 பேர் மீது போலீசார் வழக்கு

தேர்தல் முன்னெச்சரிக்கையாக 430 பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : மார் 29, 2024 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 430 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக புதுச்சேரி தமிழக போலீசார் ஆலோசனை கூட்டம், ரவுடிகள் பட்டியல் கணக்கெடுப்பு, அவர்களின் வீடுகளில் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்காக அந்தந்த காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குளில் தொடர்புடைய குற்றவாளிகள், ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக முக்கிய ரவுடிகள் தேர்தல் முடியும் வரை ஊருக்குள் நுழைய தடை விதித்தும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சில குற்றவாளிகளுக்கு எச்சரித்து போலீசார் வழக்கு போட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 நாட்களில் 430 ரவுடிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு போட்டுள்ளனர்.

மேலும் சில குற்றவாளிகளுக்கு குண்டாஸ் போடவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us