/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விபத்தில் காயமடைந்தபோலீஸ் டிரைவருக்கு தீவிர சிகிச்சை
/
சாலை விபத்தில் காயமடைந்தபோலீஸ் டிரைவருக்கு தீவிர சிகிச்சை
சாலை விபத்தில் காயமடைந்தபோலீஸ் டிரைவருக்கு தீவிர சிகிச்சை
சாலை விபத்தில் காயமடைந்தபோலீஸ் டிரைவருக்கு தீவிர சிகிச்சை
ADDED : ஜூலை 30, 2024 05:17 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே சாலை விபத்தில் தலையில் படுகாயமடைந்த போலீஸ் டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் முருகன்,36;. இவர் புதுச்சேரி போலீஸ் துறையில் எம்.டி.ஓ., பிரிவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். தற்போது பத்துக்கண்ணு சப்தகிரி ைஹடெக் சிட்டியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வில்லியனுாருக்கு தனது பைக்கிள் சென்றார். பத்துக்கண்ணு நோக்கி சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் முருகன் பைக் மீது மோதி, துாக்கி வீசப்பட்டார். தலையில் பலத்தகாமடைந்த முருகனை அருகே இருந்தவர்கள் மீட்டு ஊசுடேரி லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து முருகன் மனைவி சற்குணா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, பஸ் டிரைவர் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு சிருவாக்கூரை சேர்ந்த ராமச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.