/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிவேக பைக் ஓட்டிகளுக்கு 'ஆர்கன் டோனர்' செல்லப் பெயர் வைத்துள்ள போலீசார்
/
அதிவேக பைக் ஓட்டிகளுக்கு 'ஆர்கன் டோனர்' செல்லப் பெயர் வைத்துள்ள போலீசார்
அதிவேக பைக் ஓட்டிகளுக்கு 'ஆர்கன் டோனர்' செல்லப் பெயர் வைத்துள்ள போலீசார்
அதிவேக பைக் ஓட்டிகளுக்கு 'ஆர்கன் டோனர்' செல்லப் பெயர் வைத்துள்ள போலீசார்
ADDED : ஆக 25, 2024 05:39 AM
புதுச்சேரி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை விட வாகனங்கள் எண்ணிக்கை பெருகி விட்டது. இதுதவிர வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான வெளியூர் வாகனங்கள் புதுச்சேரியில் குவிந்து விடுகிறன்றன.
சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் உள்ளூர் வாகனங்களால் நகரின் அனைத்து சாலைகளும் கடும் டிராபிக்கில் சிக்கி தவிக்கிறது. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பியும் இப்பிரச்னைக்கு பல ஆண்டுகளாக விமோசனம் பிறக்கவில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் வாகன விபத்து அதிகரித்து உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகிறது.
கடந்த 2022ம் ஆண்டு 219 பேரும், கடந்த 2023ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி 265 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கடந்த ஆண்டு மட்டும் 2,126 வாகன விபத்துகள் நடந்துள்ளது. இதில் பலர் உடல் பாதிக்கப்பட்டு கை, கால்களை இழந்து ஊனமுற்றுள்ளனர். பெரும்பாலான விபத்துக்கள் அதிவேகத்தால் நடக்கிறது.
அதிவேகம் ஆபத்து என்பதை உணராத பல இளைஞர்கள் வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். தனது மகன் விருப்பட்டு கேட்கிறான் என்பதற்காக ரூ. 2 லட்சம் செலவு செய்து பெற்றோர் வாங்கி தரும் அதி வேகமாக செல்ல கூடிய பைக்கே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது.
இப்படி அதிவேக பைக்கில் செல்வோரை கண்டால், புதுச்சேரி போலீசார் சிறப்பு பெயர் சூட்டி அழைக்கின்றனர். அதிவேகம் செல்வோர் விபத்தில் சிக்கினால் மூளைச்சாவு ஏற்பட்டு, அவரது உடல் உறுப்புகள் வேறு நபர்களுக்கு தானமாக வழங்கப்படுகிறது.
இதனால் அதிவேகத்தில் பைக்கில் சாகசம் செய்வோரை கண்டால், அவர்களுக்கு உடல் உறுப்பு தானம் தருவோர் (ஆர்கன் டோனர்) என பெயர் சூட்டி போலீசார் அழைக்கின்றனர்.

