sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஐ., துாக்கு போட்டு தற்கொலை பணி சுமையா என போலீஸ் விசாரணை

எஸ்.ஐ., துாக்கு போட்டு தற்கொலை பணி சுமையா என போலீஸ் விசாரணை

எஸ்.ஐ., துாக்கு போட்டு தற்கொலை பணி சுமையா என போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 03, 2024 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 07:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : புதுச்சேரி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் சரவணன், 54. கிரும்பாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

இவருக்கு அருணா,48; என்ற மனைவியும், 19 வயதில் மகளும், 17 வயதில் மகனும் உள்ளனர். மகள் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டும், மகன் பி.காம்., படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சரவணன், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர், கடந்த 28ம் தேதி முதல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சரணவன், தனது மனைவி அருணாவிடம் 'எனக்கு துாக்கம் வரவில்லை, நீங்கள் துாங்குங்கள்' எனக் கூறி விட்டு, வராண்டாவில் படுத்திருந்தார்.

நேற்று அதிகாலை அருணா எழுந்து பார்த்தபோது, சரவணனை காணவில்லை. வெளியே சென்று பார்த்தபோது, தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் துாக்கில் தொங்கியதை கண்டு கூச்சலிட்டார்.

பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

தகவலறிந்த பாகூர் போலீ சார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து அவரது மனைவி அருணா அளித்த புகாரின் பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, சரவணன் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர்.

சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் மாலை 4:30 மணிக்கு பாகூர் தென்பெண்ணையாற்றில், போலீசாரின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us