/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை
/
கார் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை
ADDED : ஆக 07, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி தனியார் நிறுவன ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ், 46; சென்னையில் காஸ் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த லட்சுமிநாராயணன் மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
மகேஷ், நேற்று முன்தினம் வீட்டு வாசல் முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். நேற்று காலை பார்த்தபோது, கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து, அவர், சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, ராஜலட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர்.