தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருவடிக்குப்பத்தில் போலீஸ் விசாரணை

கருவடிக்குப்பத்தில் போலீஸ் விசாரணை

கருவடிக்குப்பத்தில் போலீஸ் விசாரணை


ADDED : மே 27, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சண்முகா நகரில் குடியிருப்புகள் முன்பு மதுபானம் குடித்து ரகளை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கருவடிக்குப்பம் சண்முகா நகர் பகுதியில் ஏராள மான குடியிருப்புகள் உள்ளது. இங்கு, இரவு நேரத்தில் வரும் மர்ம நபர்கள் வீடுகளின் முன்பு அமர்ந்து மதுபானம் குடிப்பதும், குடிபோதையில் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மது அருந்திய நபர்களை அப்பகுதி குடியிருப்புவாசிகள் தட்டி கேட்டனர். அதற்கு, மர்ம நபர்கள் ஆபாசமாக பேசியதுடன், மிரட்டல் விடுத்து சென்றனர். இது தொடர்பாக குடியிருப்புவாசிகள் லாஸ்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சண்முகா நகர் பகுதியில் தினசரி ரோந்து செல்ல தனி பீட் ஏற்பாடு செய்து கொடுப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பொது இடத்தில் மதுபானம் குடித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us