ADDED : மே 22, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தார்.
தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் ராஜவர்மன், 57; விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு, துாங்க சென்றார். அப்போது, அவர் வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டது.
வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
