ADDED : மே 10, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மனைவி ஜெயசித்ரா, 36; பேக்கரி ஊழியர். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லவில்லை. மதியம் அவருடன் பேக்கரியில் வேலை பார்க்கும் ஊழியர் மொபைல் மூலம் தொடர்பு கொண்டபோது ஜெயசித்ரா போனை எடுக்கவில்லை.
வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் வீட்டில் துாக்கில் தொங்கினார். இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயசித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தம்பி கதிர்வேல் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
