/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேருக்கு போலீஸ் வலை
/
வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 12, 2024 05:00 AM
புதுச்சேரி: தனியார் விடுதி நிர்வாகியை வழிமறித்து பணம் பறிக்க முயன்ற நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், ஆருத்ரா நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் ரகுநாதன், 44; வி.வி.பி., நகரில் தனியார் விடுதி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கனகன் ஏரி வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அவரை பின் தொடர்ந்து இரண்டு பைக்கில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கனகன் ஏரி நடுப்பகுதியில் ரகுநாதனை மடக்கிகழுத்தில் கத்தியை வைத்துரூ.40லட்சம் கேட்டு மிரட்டினர்.இரண்டு நாட்களில் பணம் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என, மிரட்டினர்.
பின் அவரிடம் இருந்த செல்போன் உடைத்துவிட்டு இதுதொடர்பாக போலீசில் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என, மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ரகுநாதன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம்போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

