/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார்-பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்
/
போலீசார்-பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : மே 30, 2024 10:59 PM

திருக்கனுார: காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் பொதுமக்கள் கலந்தாய்வு மற்றும் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
சந்தை புதுக்குப்பம் காலனியில் நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கினார்.
அப்பகுதி மக்கள் பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளதால் மாணவர்கள், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். சாதி சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படுவதால், மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கிறது.
குடியிருப்பு அருகே மதுபான கடைகள் உள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முறையிட்டனர். இதற்கு, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், கோரிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து, குழந்தை திருமண சட்டம், போக்சோ, குழந்தை தொழிலாளர் சட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
இதில், காட்டேரிக்குப்பம் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.