தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபருக்கு கத்தி வெட்டு 3 பேரிடம் போலீஸ் விசாரணை

வாலிபருக்கு கத்தி வெட்டு 3 பேரிடம் போலீஸ் விசாரணை

வாலிபருக்கு கத்தி வெட்டு 3 பேரிடம் போலீஸ் விசாரணை


ADDED : மே 11, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாலிபரை  கத்தியால் வெட்டிய மூவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் செந்தில் மகன் சிவா,19; பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, விக்கி மற்றும் விஜய் ஆகிய மூவருக்கும், இடையே கடந்த ஆண்டு திருமணத்தில் பேனர் வைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் சிவா நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் பாவாணர் நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த சிவகுரு, விக்கி மற்றும் விஜய் ஆகிய மூவரும் சிவாவை வழிமறித்து தகராறு செய்து, கத்தியால் தலை மற்றும் தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சிவாவை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவாவின் தாய் இலக்கியா அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சிவகுரு உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us