/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியிருப்பில் ரசாயன கழிவுநீர் போலீசார் வழக்குப் பதிவு
/
குடியிருப்பில் ரசாயன கழிவுநீர் போலீசார் வழக்குப் பதிவு
குடியிருப்பில் ரசாயன கழிவுநீர் போலீசார் வழக்குப் பதிவு
குடியிருப்பில் ரசாயன கழிவுநீர் போலீசார் வழக்குப் பதிவு
ADDED : மார் 03, 2025 03:52 AM
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் குடியிருப்பு பகுதியில், ராசாயன கழிவு நீர் கொட்டுபவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம், வடக்கு பாரதிபுரம் சிமென்ட் சாலையோரம், அதிகளவில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் இருந்து, மர்ம நபர்கள் சிலர் ரசாயன கழிவுநீரை, சாலையோர வாய்க்காலில் கொட்டி செல்வதால், துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், குடியிருப்பு பகுதி வாய்க்காலில் ரசாயன கழிவுநீரை கலந்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.