தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் மாயமான மாணவிகள் போலீசார் தேடும் பணி தீவிரம் 

புதுச்சேரியில் மாயமான மாணவிகள் போலீசார் தேடும் பணி தீவிரம் 

புதுச்சேரியில் மாயமான மாணவிகள் போலீசார் தேடும் பணி தீவிரம் 


ADDED : ஆக 28, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரியில் மாயமான கல்லுாரி மாணவிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி வினோபா நகர், சூசையப்பர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ப்ளோபர்ட். இவரது மகள் சப்திகா, 21; தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மர்ம நபருடன் ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

முத்திரைப்பாளையம், காந்தி திருநல்லுார், பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுகுமார். இரவது இளைய மகள் தமிழரசி, 19; அரசு மகளிர் கல்லுாரியில் 2ம் ஆண்டு பி.சி.ஏ., படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கல்லுாரி செல்ல முருகா தியேட்டர் சிக்னல் அருகே அவரது தந்தை இறக்கிவிட்டு சென்றார். அங்கிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 17 வயது மகள் தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். லாஸ்பேட்டையில் நடந்த கராத்தே பயிற்சி முகாமிற்கு சென்ற சிறுமி மாயமானார்.

இதுபோல் கடந்த 15 நாட்களில் லாஸ்பேட்டை கருவடிக்குப்பம், மங்கலம், திருபுவனை, திருக்கனுார் பகுதியில் மாயமான இளம்பெண்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us