போக்சோ வழக்கில் சிக்கிய ஊர்க்காவல்படை வீரரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை
போக்சோ வழக்கில் சிக்கிய ஊர்க்காவல்படை வீரரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை
ADDED : ஜூலை 14, 2026 07:01 PM
அரியாங்குப்பம்: போக்சோ வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த ஊர்க்காவல்படை வீரரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் அனிஷ்குமார், 23; இவர் புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆண்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். இவர் புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் 2019ம் ஆண்டு, பழகி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பைமடைந்தார். கர்பத்தை கலைத்து விட்டு, அவரிடம் பேசுவை நிறுத்தி கொண்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர் மூலம் அரியாங்குப்பம் போலீசில், கடந்த மாதம் 9ம் தேதி புகார் செய்தார். போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில் அனிஷ்குமாரை, போலீஸ் தலைமையகம் கடந்த மாதம் 12ம் தேதி பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
போலீசாரிடம் சிக்காமல், தலைமறைவாக இருந்த அனிஷ்குமார், புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் கடந்த வாரம் சரணடைந்தார். காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோர்ட் அனுமதியுடன் அரியாங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
