/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளுக்கு பாலியல் தொல்லை 'போக்சோ'வில் போலீஸ்காரர் கைது
/
மகளுக்கு பாலியல் தொல்லை 'போக்சோ'வில் போலீஸ்காரர் கைது
மகளுக்கு பாலியல் தொல்லை 'போக்சோ'வில் போலீஸ்காரர் கைது
மகளுக்கு பாலியல் தொல்லை 'போக்சோ'வில் போலீஸ்காரர் கைது
ADDED : மே 05, 2024 04:18 AM
கடலுார் : மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த போலீஸ்காரர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலுார், புதுக்குப்பம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் 45 வயது நபர். இவர், கடலுார் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காராக பணிபுரிகிறார். இவரது 14 வயது மகள் கடலுாரில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில மாதங்களாக போலீஸ்காரர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து எஸ்.பி., ராஜாராமிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்குமாறு கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பத்மா விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து நேற்று போலீஸ்காரரை கைது செய்தார்.
இச்சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.