தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி நலப்பணிச் சங்க வாழ்வியல் கருத்தரங்கம் 

புதுச்சேரி நலப்பணிச் சங்க வாழ்வியல் கருத்தரங்கம் 

புதுச்சேரி நலப்பணிச் சங்க வாழ்வியல் கருத்தரங்கம் 


ADDED : மே 25, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில்,  ‘சான்றோரைத் துணைக் கொள்ளல்’ என்ற தலைப்பிலான, கோடைக்கால வாழ்வியல் கருத்தரங்கம் நடந்தது.

பாகூர் அடுத்துள்ள சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் நடந்த கருத்தரங்கில், புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மருந்தாளுநர் கல்லூரி மாணவி இசைமொழி வரவேற்றார். சங்க நிறுவுநர் செல்வி முன்னிலை வகித்தார். ஆலோசகர் வரலாற்று விரிவுரையாளர் தனராஜா நோக்கவுரையாற்றினார்.

துணைத் தலைவர் காவலர் கணபதி, மண்டல அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி அரசு மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி, கொல்லிமலை வள்ளலார் அறக்கட்டளைத் தலைவர் வழக்கறிஞர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு, சான்றோரைத் துணைக் கொள்ளல் என்னும் தலைப்பில் கருத்துரையாற்றி. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். 

மாணவிகள் சரினா, சாதனா, காவியா, பூஜா,  பெற்றோர் வழிகாட்டுதல் குறித்து கலந்துரையாடல் செய்தனர். மாணவிகள் செல்வி,  வரலட்சுமி, காவியா, சாரதா ஆகியோர்  நல்லோரை இனம் காணுதல் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் செய்தனர். மண்டல அமைப்பாளர் பவித்ரா நன்றி கூறினார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us