/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கீழ்பரிக்கல்பட்டில் பொங்கல் பண்டிகை வெளிநாடு வாழ் தமிழர்கள் கொண்டாட்டம்
/
கீழ்பரிக்கல்பட்டில் பொங்கல் பண்டிகை வெளிநாடு வாழ் தமிழர்கள் கொண்டாட்டம்
கீழ்பரிக்கல்பட்டில் பொங்கல் பண்டிகை வெளிநாடு வாழ் தமிழர்கள் கொண்டாட்டம்
கீழ்பரிக்கல்பட்டில் பொங்கல் பண்டிகை வெளிநாடு வாழ் தமிழர்கள் கொண்டாட்டம்
ADDED : ஜன 14, 2025 11:51 PM

பாகூர்: கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில், வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில் உள்ள பூண்டியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில், பிரான்ஸ், கனடா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், தங்களின் குடும்பத்தினருடன் பங்கேற்று பராம்பறிய முறைப்படி, வேட்டி, சேலை அணிந்து, அடுப்பு மூட்டி, மண் பானையில் மஞ்சல் கொத்து கட்டி, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பொங்கி வந்த போது, பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டு,குலவை சப்தம் எழுப்பி அசத்தினர்.
விழாவையொட்டி, நடந்த கலை நிகழ்ச்சிகளை முன்னாள் எம்.எல்.ஏ., விக்ரமன் துவக்கி வைத்தார். மல்லர் கம்பம், சிலம்பம் ஆகிய வீர விளையாட்டுகளும், தப்பாட்டம், பறை இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக, பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை, வெளிநாடு வாழ் தமிழரான பாஸ்கர் (எ) இலங்கை வேந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் மாறன் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.