/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூங்கொடியம்மன் கோவில் தேரோட்டம்
/
பூங்கொடியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED : ஏப் 27, 2024 04:33 AM

திருக்கனுார் : புதுக்குப்பம் பூங்கொடியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுக்குப்பம் பூங்கொடி அம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் தீமிதி உற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வீதியுலா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக நேற்று காலை 8:30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சாகை வார்த்தல் நடந்தது.
இன்று மாலை 5:30 மணிக்கு திரவுபதி அம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவம், நாளை (28ம் தேதி) மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

