/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை: கண்காணிப்பாளர் செவ்வேள் தகவல்
/
நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை: கண்காணிப்பாளர் செவ்வேள் தகவல்
நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை: கண்காணிப்பாளர் செவ்வேள் தகவல்
நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை: கண்காணிப்பாளர் செவ்வேள் தகவல்
ADDED : ஜூலை 05, 2024 06:39 AM
புதுச்சேரி : அரசு பொது மருத்துவமனையில் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக செய்யப்பட்டு வருகிறது என, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மைய மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்தில் முடநீக்கியல் துறையின் தலைவர் துபே மேற்பார்வையில் மூட நீக்கியல் சிறப்பு நிபுணர் சாந்தமூர்த்தி, மயக்கவியல் துறை தலைவர் மதன் ஆகியோர் இணைந்து ஆர்த்தோஸ்கோப்பி எனப்படும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த சிகிச்சை தற்போது 100 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் முழங்கால் மூட்டு மற்றும் தோள்பட்டையில் ஏற்படும் தசை நார் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அந்த வகை சிகிச்சையில் அதிக ரத்த சேதாரம் ஏற்படாது.
அதிக நேரம் தேவையில்லை. உள்நோயாளியாக அதிக நாட்கள் தங்கியிருக்க தேவையில்லை. குணமாக தேவைப்படும் நாட்களும் குறைவு. இத்தகைய சிகிச்சை தற்போது இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் செய்யப்படுவதால் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.