/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹைட்ராலிக் ஜேக்கப் பார்ஜர் மூலம் துறைமுகம் துார்வாரும் பணி
/
ஹைட்ராலிக் ஜேக்கப் பார்ஜர் மூலம் துறைமுகம் துார்வாரும் பணி
ஹைட்ராலிக் ஜேக்கப் பார்ஜர் மூலம் துறைமுகம் துார்வாரும் பணி
ஹைட்ராலிக் ஜேக்கப் பார்ஜர் மூலம் துறைமுகம் துார்வாரும் பணி
ADDED : ஜூலை 22, 2024 01:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி உப்பளம் புது துறைமுகத்தில், படகு நிறுத்தும் தளம் துவங்கி முகத்துவாரம் வரை சிறிய ரக கப்பல்கள் வந்து செல்ல குறைந்தது 6 மீட்டர் ஆழம் தேவை. பல இடங்களில் மணல் துார்ந்துபோய் உள்ளதால் சிறிய ரக கப்பல்கள் கூட வந்து செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி.,யின் துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் மூலம்,முகத்துவாரம் துவங்கி புதிய துறைமுகம் வரை 1 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் அகற்றி துார்வார புதுச்சேரி துறைமுகத் துறை திட்டமிட்டது.
ஐ.ஐ.டி., கடல் பொறியியல் பிரிவு பேராசிரியர் முரளி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள், கடந்த ஒரு வாரமாகது றைமுகம் படகு நிறுத்தும் தளம் துவங்கி முகத்துவாரம் வரை எந்தெந்த பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது என ஆழம் கண்டறியும் கருவி எக்கோ சவுண்ட், ஜியோ மேக்ஸ் சிக்னல்கள் கருவியுடன் சர்வே செய்தனர். இதன் மூலம் 6 மீட்டருக்கு குறைவாக ஆழம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டது.
துர்வாருதல் என்றால் வழக்கமாக டிரஜிங் கப்பல்கள் மூலம் துார்வாரும் பணி நடக்கும். இந்த முறை ஐ.ஐ.டி., வல்லுநர்கள் உருவாக்கிய ஹைட்ராலிக் கால்களுடன் கூடிய மிதக்கும் ஜேக்கப் பார்ஜர் மூலம் துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. ஹைட்ராலிக் கால்கள் மூலம் ஜேக்கப் பார்ஜர் சரியான ஆழத்தில் நிலை நிறுத்தப்பட்டு துார்வாரும் பணிகள் நடக்கிறது.