மின்வெட்டால் விளைநிலங்கள் பாதிப்பு :பிரேமலதா கண்டனம்
மின்வெட்டால் விளைநிலங்கள் பாதிப்பு :பிரேமலதா கண்டனம்
ADDED : ஜூன் 12, 2026 06:30 PM
விருத்தாசலம்: தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீரின்றி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க., பிரேமலதா எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயிர்கள் வாடி, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும், வேதனையையும் சந்தித்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாதது ஒரு புறம், மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறு புறம், என உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போல, விவசாயிகளின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
