/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேரம் மின் தடை
/
மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேரம் மின் தடை
ADDED : ஏப் 06, 2024 05:38 AM

பாகூர்: முள்ளோடை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து எரிந்ததால், 2 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.
பாகூர் அடுத்த முள்ளோடையில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், முள்ளோடை துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று நேற்று அதிகாலை திடீரென பழுதாகி தீப்பிடித்து எரிந்தது.
மின் துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, பொறியாளர் குழுவினர், மின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின், சுமார் 2 மணி நேரம் கழித்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.

