/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய தொழிலாளர்களுக்கு உதவித் தொகை பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை
/
விவசாய தொழிலாளர்களுக்கு உதவித் தொகை பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை
விவசாய தொழிலாளர்களுக்கு உதவித் தொகை பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை
விவசாய தொழிலாளர்களுக்கு உதவித் தொகை பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 05:31 AM
புதுச்சேரி : மழை காலத்தில் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என காரைக்கால் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர், பேசியதாவது;
கடந்த பட்ஜெட்டில் காரைக்காலில் அரசு மருத்துவ கல்லுாரி என்ற அறிவிப்பு இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயத்தால் பெரிய அளவில் லாபம் கிடையாது.
ெரும்பலான விவசாயிகள் நிலங்களை விற்று விட்டனர். காரைக்காலில் 15 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விவசாய நிலம் தற்போது 4,500 ஹெக்டேராக குறைந்துள்ளது. சிலர் தான் விவசாயம் செய்கின்றனர்.
எனவே, விவசாயிகளுக்கு பயிர் ஊக்க தொகையை ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், மழை காலத்தில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கினால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். காரைக்காலில் இந்திய உணவு கழகம் நிர்ணயித்த அளவு நெல் கொள்முதல் செய்வது கிடையாது. இதனால் தமிழகத்திற்கு கொண்டு சென்று நெல் விற்கும் நிலை உள்ளது. காரைக்கால் விவசாய கல்லுாரியை, மத்திய அரசின் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து நியமிக்கப்படும் ஆசிரியர்களை ஆட்சியாளர்கள் சர்வீஸ் பிளேஸ்மென்ட் மூலம் புதுச்சேரிக்கு மீண்டும் அழைத்த கொள்கின்றனர். பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். சி.பி.எஸ்.இ., பாடதிட்டம் கொண்டு வந்தாலும், அதற்கு ஏற்ப பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை' என்றார்.