/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 15 நாளில் 1,106 மீது வழக்கு பதிவு
/
முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 15 நாளில் 1,106 மீது வழக்கு பதிவு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 15 நாளில் 1,106 மீது வழக்கு பதிவு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 15 நாளில் 1,106 மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 17, 2024 12:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தலையொட்டி, கடந்த 15 நாட்களில் 1,106 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்கு பதிந்து கைது செய்து விடுவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. ஓட்டு பதிவு அமைதியான முறையில் நடத்த தேர்தல் துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு கிராமத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திரியும் நபர்கள், குற்ற பின்னணி கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் 15ம் தேதி வரை புதுச்சேரியில் 1,106 பேர் மீது சி.ஆர்.பி.சி., பிரிவு 150 மற்றும் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட் டுள்ளனர்.