/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மாகி அணி வெற்றி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மாகி அணி வெற்றி
ADDED : ஆக 09, 2024 04:47 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
புதுச்சேரியில் பிரீமியர் லீக் போட்டி, துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் கடந்த, 5ம், தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்று மதியம் நடந்த போட்டியில், வில்லியனுர் மோகித் கிங்ஸ் மற்றும் மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி, வில்லியனுர் மோகித் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் ஆடிய வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில், 117 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் பானு ஆனந்த், 43 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 116 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் மழை காரணமாக, ஆட்டம் தடைப்பட்டது. இதன் மூலம் மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி, 12 ரன்கள் வித்தியாசத்தில் டி.எல்.எஸ் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணியின், பாபித் அகமத் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நேற்று மாலை நடக்க இருந்த ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் மற்றும் காரைக்கால் நைட் ரைடர்ஸ் ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.