தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வைட் டவுன் ஜென்டஸ் அணி வெற்றி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வைட் டவுன் ஜென்டஸ் அணி வெற்றி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வைட் டவுன் ஜென்டஸ் அணி வெற்றி


ADDED : ஆக 10, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வைட் டவுன் ஜென்ட்ஸ் அணிவெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் அனுமதி பெற்று, பாண்டிச்சேரி பிரீமியர் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது.

நேற்று மதியம் 2:45 மணிக்கு துவங்கிய போட்டியில் வைட் டவுன் ஜென்ட்ஸ் அணியும், காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணியும் ஆடின. டாஸ் வென்றகாரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி பவுலிங்கை தேர்வுசெய்தது.

20 ஓவர்கள் முடிவில் வைட் டவுன் ஜென்ட்ஸ் அணி 7 விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்து. வைட் டவுன் ஜென்ட்ஸ் அணியின் ரகுபதி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து. வைட் டவுன் ஜென்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

வைட் டவுன் ஜென்ட்ஸ் அணியின் ரகுபதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us