sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி

/

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி


ADDED : ஆக 22, 2024 01:52 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், நேற்று மதியம் 2:45 மணிக்கு தகுதி சுற்று (குவாலிபையர் -1) போட்டியில் வைட் டவுன் ட்ராப்தாட் ஜென்ட்ஸ் மற்றும் மாகி மெகலோ ஸ்டைகர் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் மழை வந்து தடை பட்டதால், 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

முதலில் ஆடிய டவுன் ட்ராப்தாட் ஜென்ட்ஸ் அணி 8 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழந்து 71 ரன்கள் எடுத்தனர். சுனில் பிஷ்நோய் 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். டி.எல்.எஸ்., முறை படி 8 ஓவர்களில் 79 என்ற இலக்குடன் ஆடிய மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி 7.4 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 82 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

மாலை 6:45 மணிக்கு நடந்த எலிமினேட்டர் போட்டியில், வில்லியனுார் மோஹித் கிங்ஸ் மற்றும் உசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தது. ஜஸ்வந்த் ஸ்ரீராம் 36 பந்துகளில் 46 ரன்களும் சித்தக் சிங் 19 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து, ஆடிய வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 190 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. நாளை நடைபெறும் தகுதி சுற்று -2 போட்டியில் ஆட தகுதி பெற்றது. பானு ஆனந்த் 42 பந்துகளில் 61 ரன்களும் அமன் கான் 36 பந்துகளில் 64 ரன்களும் எடுத்தனர். வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணியின் அமன் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.






      Dinamalar
      Follow us