/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி கோரிமேடு, மூலகுளம், வீராம்பட்டினம் வெற்றி
/
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி கோரிமேடு, மூலகுளம், வீராம்பட்டினம் வெற்றி
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி கோரிமேடு, மூலகுளம், வீராம்பட்டினம் வெற்றி
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி கோரிமேடு, மூலகுளம், வீராம்பட்டினம் வெற்றி
ADDED : செப் 09, 2024 05:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், பாண்டிச்சேரி பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி, போலீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
7 ம் தேதி நடந்த போட்டியில் கோரிமேடு பேந்தர்ஸ், உப்பளம் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கோரிமேடு பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. உப்பளம் ராயல்ஸ் அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. 3 விக்கெட் எடுத்த ஆய்வாளர் ரமேஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நேற்று நடந்த போட்டியில் லாஸ்பேட் லிஜென்ட்ஸ், மூலகுளம் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய லாஸ்பேட் லிஜென்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
மூலகுளம் கிளாடியேட்டர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சிவராமன் ஆட்டநாயகன் விருதினை மேக்ஸ்தெர்ம் இந்தியா பிரைவேட் லிட்., நிறுவன மேலாளர் விஸ்வாஸ் வழங்கினார்.
வீராம்பட்டினம் ஷார்க்ஸ், குமாரபாளையம் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.
குமாரபாளையம் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 4 விக்கெட் எடுத்த வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணியின் ரிஸ்வானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் கணேஷ், முகிலன், குமாரவேல், கதிர்வேல் ஆகியோர் செய்திருந்தனர்.