/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் தங்க மோதிரம் வழங்கல்
/
அரசு பள்ளியில் தங்க மோதிரம் வழங்கல்
ADDED : ஆக 16, 2024 05:37 AM

நெட்டப்பாக்கம்: சுதந்திர தினவிழாவையொட்டி, மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க மோதிரம் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜகுமாரி வரவேற்றார். துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். சமூக ஆர்வலர் தனபூபதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 2 கிராம் தங்கம் மோதிரம் வழங்கினார். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
பள்ளி தலைமையாசிரியை சார்மி ஜோஸ்மீன் நன்றி கூறினார்.

