தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மரில் பிரதமரின் காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு முகாம்

ஜிப்மரில் பிரதமரின் காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு முகாம்

ஜிப்மரில் பிரதமரின் காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு முகாம்


ADDED : ஜூலை 14, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: ஜிப்மரில் நாளை (16ம் தேதி) முதல் நோயிலிருந்து விடுதலை என்ற சிறப்பு விழிப்புணர்வு பதிவு முகாம் துவங்குகிறது.

இது குறித்து ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஆகிய திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், நாளை (16ம் தேதி) முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை நோயிலிருந்து விடுதலை என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாம் நடக்கிறது. 

இந்த முகாமில், ஆயுஷ்மான் பாரத் சுகாதார  கணக்கு எண், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டை, மற்றும் ஆயுஷ்மான் வய் வந்தனா அட்டைகளை இலவசமாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். 

ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த பதிவு முகாம், தினமும் காலை 6.30 மணி முதல், மாலை 4 மணி வரை நடக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு  ஆண்டு ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்வரை இலவச காப்பீடு வழங்கப்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய் வந்தனா திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் சுகாதர கணக்கு எண் மூலம், ஒவ்வொருக்கும் 14 இலக்க டிஜிட்டல் சுகாதார அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம் பாதுகாக்கப்படும் பதிவுகளை, நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் எளிதாக பயன்படுத்த முடியும்.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us