sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் சிறையில் கைதிகள் மோதல்

காரைக்கால் சிறையில் கைதிகள் மோதல்

காரைக்கால் சிறையில் கைதிகள் மோதல்


ADDED : ஜூன் 01, 2024 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 04:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் காயமடைந்தார். காரைக்கால், மதகடி பகுதியில் கிளை சிறை உள்ளது. இங்கு கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவத்தில் ஈடுப்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இதில், போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற காரைக்கால், நிரவி, கருக்களாச்சேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 48, என்பவரும், கொலை வழக்கில் தொடர்பில் உள்ள புதுச்சேரி, வில்லியனுார், பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதிஷ், 22, என்பவரும் சிறையில் சமையல் செய்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் சமையல் அறையில் ஆறுமுகம் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த போது, பிரதிஷ் பொட்டுக்கடலை துவையல் செய்தார். அதில், தண்ணீரை ஊற்றியது யார் என, ஆறுமுகத்திடம் பிரதிஷ் கோட்டதால் இருவருக்கு தகராறு ஏற்பட்டது. அத்திரமடைந்த பிரதிஷ் கிச்சனில் தேங்காய் உடைக்கு அறிவாளால் ஆறுமுகத்தை நான்கு இடங்களில் வெட்டினார்.

படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை சிறை அதிகாரிகள் மீட்டு, அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். இதுக்குறித்த புகாரின் பேரில், பிரதிஷ் மீது நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us