ADDED : செப் 15, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த தனியார் கம்பெனி ஊழியர் பரிதபமாக இறந்தார்.
வில்லியனுார் உத்திரவாகினிப்பேட் காந்தி வீதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் 38, தனியார் கம்பெனி ஊழியர்.
சமீப காலமாக ராஜசேகர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று மதியம் 2 மணிக்கு மது குடிக்க சென்றவர் வெகு நேராகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் ராஜசேகரை தேடிச் சென்றனர்.
ராஜசேகர் வில்லியனுார் ஓம்சக்தி நகரில் காலி மனையில் மது குடித்துவிட்டு அவரது பைக் அருகில் மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.