தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் நிறுவன செக்யூரிட்டி கைது

கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் நிறுவன செக்யூரிட்டி கைது

கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் நிறுவன செக்யூரிட்டி கைது


ADDED : ஜூலை 10, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் ஜூலை 11–: கல்லுாரி மாணவியை ஆசைக்கு இணங்ககோரி, மிரட்டிய தனியார் நிறுவன செக்கியூரிட்டியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் திருமாவளவன், 35; பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 15ம் தேதி, கடுவனுார் பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக நின்று கொண்டிருந்த 18 வயது கல்லுாரி மாணவியிடம், மொபைல் எண்ணை கேட்டார். மாணவி மறுத்துவிட்டார்.

உடன் திருமாவளன், அந்த மாணவியிடம் தனது ஆசைக்கு இணைங்கினால், தேவையானதை வாங்கி தருவதாக கூறி, பைக்கில் உட்காரச் சொல்லி தொந்தரவு செய்தார். நீ என்னுடன் வராவிட்டால் உன் நண்பர்கள், உன்னிடம் பேசுபவர்களிடம் உன்னை பற்றி அவதுாறாக கூறி அவமானப்படுத்துவேன் என, மிரட்டி உள்ளார்.

அப்போது, பஸ் வரவே, மாணவி கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த தகவலை அம்மாணவி யாரிடமும் சொல்லாமல் அச்சத்துடனே இருந்து வந்தார். அதனை கண்டறிந்த அவரது தாய் நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது, அவர் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறியுள்ளார்.

பின், அந்த மாணவி தனது தாயுடன் சென்று, பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்த திருமாவளவனை கைது செய்தனர்.

இவர், கடந்தாண்டு ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை, கர்ப்பமாக்கிய போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த நிலையில், தற்போது கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us