/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய் விழிப்புணர்வு போஸ்டர் சிறந்த படைப்புக்கு பரிசளிப்பு
/
காசநோய் விழிப்புணர்வு போஸ்டர் சிறந்த படைப்புக்கு பரிசளிப்பு
காசநோய் விழிப்புணர்வு போஸ்டர் சிறந்த படைப்புக்கு பரிசளிப்பு
காசநோய் விழிப்புணர்வு போஸ்டர் சிறந்த படைப்புக்கு பரிசளிப்பு
ADDED : பிப் 25, 2025 05:05 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் மாநில காசநோய் கட்டுப் பாட்டுத்துறை சார்பில், பயிற்சி மருத்துவர்களின் காசநோய் குறித்த சிறந்த விழிப்புணர்வு போஸ்டருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன், மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி இயக்குனர் காக்னே, சமூக மருத்துவ துறை தலைவர் பிரேம் ஆனந்த், உதவி பேராசிரியர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கூடுதல் ஊட்டச்சத்து வழங்கும் நிக்ஷய் மித்ரா திட்டம் தொடர்பான, சிறந்த விழிப்புணர்வு குறித்த மூன்று போஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
இதில், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் வித்யாஸ்ரீ, கனிமொழி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். போஸ்டர்களை உருவாக்கிய பயிற்சி மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை காலத்தின்போது, உணவு பெட்டகம் வழங்கிய, புதுச்சேரியை சேர்ந்த 6 நிக்ஷய் மித்ராக்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.