தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலம்


ADDED : ஜூலை 24, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில், சட்டசபை நோக்கி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று  சட்டசபை நோக்கி ஊர்வலம் நடந்தது. இயக்க நிறுவனர் ரகுநாதன் தலைமையில், அண்ணா சிலையில் இருந்து துவங்கிய ஊர்வலம் ஆம்பூர் சாலை சந்திப்பில் முடிந்தது. தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு துறைகளில் நடக்கும் முறைகேடுகள், ஏழைகளின் சொத்துகள் அபகரிப்பதை தடுக்க வேண்டும். புதுச்சேரியில், மாநில தகவல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுதப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us