/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்': நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
'பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்': நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
'பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்': நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
'பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்': நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 14, 2024 06:06 AM
புதுச்சேரி:
பூஜ்ய நேரத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1986 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படும் இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என மூன்று துறைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 12 பேராசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் இன்றைக்கு நிறுவனத்தில், ஒரு பேராசிரியர்கள் கூட பணியில் இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மொழியில் பண்பாட்டு நிறுவனத்திற்கு பி.எச்டி.,படிப்பில் ஒரு மாணவர்கள் கூட சேர்க்கப்படவில்லை. மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 இணை பேராசிரியர்கள் பணியில் இருக்கும்போது தலா 6 மாணவர்கள் வீதம் 72 பேருக்கு பி.எச்டி.,படிப்பில் வழிகாட்ட முடியும்.
பேராசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு பணியாண்டுகள் இருந்தால் மட்டுமே பி.எச்டி., வழிகாட்ட ஒப்புதல் கிடைக்கும். ஆனால், அனைத்து பேராசிரியர்களும் ஓய்வு பெற்றுவிட்டதால், பி.எச்டி., மாணவர் சேர்க்கை நடக்கவில்லை.
எம்.பில்.,படிப்பினை பொருத்தவரை 12 இணை பேராசிரியர்கள் இருந்தால் 24 மாணவர்கள் எம்.பில்., படிக்கலாம். ஆனால் ஒரு பேராசிரியர்கள் கூட பணியில் இல்லாததால் எம்.பில்., படிப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சிவா, அங்காளன் எம்.எல்.ஏ., பேசினர்.

