ADDED : மே 29, 2026 10:21 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் வீதி, எண்–87ல், காந்தி வீதி சந்திப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ விஜயா மெடிக்கல்ஸ்’ திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
நெல்லித்தோப்பு விஜயா மெடிக்கல்ஸ் உரிமையாளர் தமிழ்செல்வன், எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரபாகரன், தோல் நோய் மற்றும் தோல் அறுவை சிகிச்சை நிபுணர் பானுப்பிரியா, ரேடியாலஜி மற்றும் மகப்பேறு கால கருவியல் சிகிச்சை நிபுணர் கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து வகையான மருந்துகளுக்கும் 23 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்புச் சலுகை நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
