/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் உயர்வை கண்டித்து போராட்டம்: காங்., தலைவர் வைத்திலிங்கம் அழைப்பு
/
மின் உயர்வை கண்டித்து போராட்டம்: காங்., தலைவர் வைத்திலிங்கம் அழைப்பு
மின் உயர்வை கண்டித்து போராட்டம்: காங்., தலைவர் வைத்திலிங்கம் அழைப்பு
மின் உயர்வை கண்டித்து போராட்டம்: காங்., தலைவர் வைத்திலிங்கம் அழைப்பு
ADDED : செப் 02, 2024 01:12 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க, காங்., கட்சியினருக்கு, மாநிலத் தலைவர் வைத்திலிங்கலிங்கம் எம்.பி., அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாளை (3ம் தேதி) காலை 10:00 மணிக்கு, காங்., சார்பில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தோம்.
அதேபோல, இண்டியா கூட்டணியில் உள்ள, தி.மு.க., கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் போராட்டத்தை அறிவித்து இருந்தன.
அதன்படி வரும், 3ம் தேதி, அதாவது நாளை காங்., சார்பில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் இண்டியா கூட்டணி கட்சிகள் எடுத்துள்ள முடிவின்படி, இன்று காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி தலைமை செயலகம் முன்பாக, முற்றுகை போராட்டம் நடக்க உள்ளது.
முன்னதாக, காலை 9.00 மணிக்கு, புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள, அண்ணா சிலை அருகிலிருந்து போராட்டப் பேரணி புறப்படுகிறது. இண்டியா கூட்டணி சார்பில் நடக்கும் இந்த போராட்டத்தில், காங்., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.