தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அஞ்சலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அஞ்சலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அஞ்சலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 30, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் முன் அறிவிப்பின்றி 3 அஞ்சலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,  சங்க கோட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ​புதுச்சேரியில் பாண்டிச்சேரி பஜார் துணை அஞ்சலகம், உழவர்கரை கிளை அஞ்சலகம் மற்றும் காலாப்பட்டு கிளை அஞ்சலகம் ஆகியவை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளன. ​மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ​அஞ்சல் சேவைகளை சுருக்கும் கொள்கையை கைவிட்டு, மக்களுக்கு பயனுள்ள சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்.

​ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்காமல் எந்தவொரு நிர்வாக மறுசீரமைப்பையும் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us