/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ மாணவி கொலையை கண்டித்து போராட்டம்
/
மருத்துவ மாணவி கொலையை கண்டித்து போராட்டம்
ADDED : ஆக 29, 2024 07:19 AM

புதுச்சேரி: கொல்கட்டாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, பராசக்தி ஆன்மிக இயக்கம், ரோட்டரி காஸ்மாஸ் இன்னர்வீல், இன்னர்வீல் சங்கம் மற்றும் கோல்டு இன்னர்வீல் சங்கம் ஆகிய பெண்கள் அமைப்பினர் சார்பில் லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது.
பராசக்தி ஆன்மீக இயக்க நிர்வாகிகள் கனகவள்ளி, பிரபா, மகாலட்சுமி, ரோட்டரி காஸ்மாஸ் இன்னர்வீல் தலைவர் செந்தில்தேவி, பொருளாளர் தமிழ்செல்வி, இணை பொருளாளர் விஜி, இன்னர்வீல் சார்பில் தலைவி அம்புஜவள்ளி, செயலாளர் சுமிதா, கோல்டு இன்னர்வீல் சங்கம் சார்பில் கோகுல லட்சுமி, புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.