/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைகழக நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
பல்கலைகழக நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 07, 2024 06:53 AM

புதுச்சேரி : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம் சார்பில் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் முருகன், மாணவர் பெருமன்ற தலைவர் உதயராஜ் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் எரிக்ரம்போ, அகல்யா, உமாசங்கரி, சிவராமகிருஷகணன், பூஜா, கவிநிலவு, வேணி, முகிலன், பிரவீன், எழிலன், முரளி முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி கண்டன உரையாற்றினார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காவலாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து பாட பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.