‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
பாகூர்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜனநாயக அமைப்புகள் சார்பில் பாகூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பாகூர் கொம்யூன் செயலாளர் அரிதாஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன் துவங்கி வைத்தார். இந்திய மாணவர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் செயலாளர் சத்தியசீலன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் இளவரசி, இந்திய தொழிற்சங்க மையத்தின் நிர்வாகி கந்தன், அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பத்மநாபன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநில செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டது.
