/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் அறங்காவல் குழுவை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
கோவில் அறங்காவல் குழுவை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில் அறங்காவல் குழுவை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில் அறங்காவல் குழுவை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2025 04:41 AM

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் சொத்துக்களை, அறங்காவல் குழுவினர் தவறாக பயன்படுத்துவதால், அந்த அறங்காவல் குழுவை நீக்க வலியுறுத்தி, ருத்ர வன்னியர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுலகம் முன்பு, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அப்பகுதி பொதுமக்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.அதனை தொடர்ந்து, கலெக்டரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், இப்பிரச்னை குறித்த நீதி மன்ற உத்தரவில்,புதிய அறங்காவல் குழு அமைக்கும் வரை, தற்போதுள்ள அறங்காவல் குழு, கோவில் நிர்வாகத்தை பார்க்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள், கட்சியினர் சிலருக்கு கோவில் சொத்துக்களை விற்று,தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஆணையரிடமிருந்து,அனுமதியின்றி, கோவில் விஷயங்களை, தன்னிச்சியாக முடிவு எடுத்து வருகின்றனர். அறங்காவல் குழுவில், அரசியல் சார்ந்தவர்கள் இருப்பதால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.