/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்கல்
ADDED : ஜூன் 13, 2024 12:29 AM

புதுச்சேரி : திருபுவனை பகுதி பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள், கல்வி ஊக்கத் தொகையை அங்காளன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.
மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, சோரப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, வம்புப்பட்டு அரசு ஆரம்பப்பள்ளியில் 2024-25ம் கல்வி ஆண்டு துவக்க விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் அங்காளன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், கல்வி ஊக்கத் தொகை, தேசிய அளவில் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
உதவித் தொகை:
கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆதி திராவிடர் மாணவர்கள் 21 பேருக்கு, ரூ.10 ஆயிரம் வீதம் 21 மாணவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் உதவித் தொகை வழங்கினார். திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வாழ்த்தி பேசினார். பள்ளி துணை முதல்வர், தலைமை ஆசிரியர், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.