/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
27 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கல்
/
27 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கல்
ADDED : ஜூன் 22, 2024 05:23 PM

புதுச்சேரி:
மணவெளி தொகுதியைச் சேர்ந்த, குடும்ப தலைவரை இழந்த, 27 குடும்பங்களுக்கு ரூ. 8.55 லட்சம் உதவி தொகையை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம், ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மணவெளி தொகுதியை சேர்ந்த, குடும்பத்தலைவரை இழந்த, 26 குடும்பங்களுக்கு தலா, ரூ.30 ஆயிரம் மற்றும் 1 குடும்பத்திற்கு, ரூ.75, ஆயிரம் என மொத்தம், ரூ.8.55 லட்சத்திற்கான உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டது. இதற்கான அரசாணைகளை, சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு, சபாநாயகர் செல்வம், தவளக்குப்பத்தில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் ராமு கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், சக்திவேல், பாஸ்கர், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் மணி, சிவா, சகாயராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.