தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவிகளுக்கு லேப் டாப் வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு லேப் டாப் வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு லேப் டாப் வழங்கல்


ADDED : ஆக 30, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கல்வித்துறை சார்பில், பிளஸ் 1 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி முதல்வர் சாய் வர்கிஸ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை இக்னேஷியஸ் மேரி முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியை தனலட்சுமி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மாணவியருக்கு லேப்டாப் வழங்கினார். மேலும், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் விலையில்லா மழை அங்கி மற்றும் விலையில்லா சைக்கிள்களும் அனைத்து, 10ம் வகுப்பு மாணவியருக்கும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, சின்னாத்தாவின் உருவப் படத்தை திறந்து வைத்த பிரகாஷ்குமார், இசைக்கூடத்தையும் திறந்து வைத்தார். பள்ளியில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார்.

விழாவில், சின்னாத்தாவின் மகன் பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியை அருள்மொழி நன்றி கூறினார். விழாவை விரிவுரையாளர்கள் துர்காதேவி, பாரதிபாலா தொகுத்து வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us