/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : ஆக 21, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டர் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சமூக நலத்துறை சார்பில், கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு தொகுதியைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டர் சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நல அதிகாரி அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.