/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜூடோ வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கல்
/
ஜூடோ வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கல்
ADDED : செப் 03, 2024 06:33 AM

புதுச்சேரி : ஜூடோ லீக் போட்டியில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னையில் இந்த மாத இறுதியில் 4வது கேலோ இந்தியா பெண்கள் ஜூடோ லீக் போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும், புதுச்சேரி மாநில அணியில் பங்கு பெறும் வில்லியனுார் சக்ஸஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவிகளுக்கு புதுச்சேரி இன்னர் வீல் சங்கம் மூலம் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.
இன்னர் வீல் தலைவி அம்புஜவல்லி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவி வாணி முன்னிலை வகித்தார். சங்க உறுப்பினர்கள் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி சமூக சேவை மன்ற நிறுவனர் கலியமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயிற்சியாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, வாஞ்சிநாதன், ராம்லஷ் ஆகியோர் செய்திருந்தனர்.