/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்
/
மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்
ADDED : ஆக 11, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் பேராசிரியர் அன்னுசாமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., இலவச லேப் டாப்புகளை வழங்கினார்.
பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலை பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வி நிறுவனத் தலைவர் இருதயமேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நீலம் அருட்செல்வி வாழ்த்தி பேசினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பிளஸ் 1 படிக்கும் 95 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.
பள்ளி தாளாளர் ராஜராஜன், நிர்வாக அதிகாரி அருள்ராஜ் வள்ளவன் உட்பட பலர் பங்கேற்றனர். சேலியமேடு அன்னுசாமி பள்ளி தாளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

