/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் லேப்டாப் வழங்கல்
/
அரசு பள்ளியில் லேப்டாப் வழங்கல்
ADDED : ஆக 18, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சார்மிஜோஸ்மின் முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் ராஜவேலு பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச ரெயின்கோர்ட் ஆகியவற்றை வழங்கினார். பள்ளி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியை ராஜகுமாரி நன்றி கூறினார்.